பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), ராஜஸ்தான் ராயல்ஸ்(ஆர்ஆர்) அணிகள் மோதவுள்ளன.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த சீசனில் இதுவரை சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியில் கூட பெங்களூரு அணி வெற்றி பெறவில்லை. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிக் கணக்கை பெங்களூரு அணி தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.