சென்னை: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக கொண்டூர் கே.ரவிராஜூ நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 திவ்ய வைணவ தலங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. பராங்குச சோழன் கட்டிய 3ம் நூற்றாண்டு கோவில் இது. இங்கு ஒரு கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை- (4 நிமிடங்கள்) மட்டும் இருந்தாலே மோட்சம் கிட்டிடும் என்பது ஐதீகம். 750 அடி உயரத்தில், 1305 படிக்கட்டுகளுடன் கடிகாசலம் எனும் ஒரே மலை குன்றின் மீது 200 அடி நீளம், 150 அடி அகலத்தில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கோயில் உள்ளது.
லட்சுமி நரசிம்மர் யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் திருத்தலங்களில் ஒன்றாகும். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக கொண்டூர் கே.ரவிராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார். அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பணிகள் சிறக்க அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The post சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவராக கொண்டூர் கே.ரவிராஜூ நியமனம் appeared first on Dinakaran.