சென்னை: ஜனவரி 1ம் தேதி முதல் பயணிகள் ரயில்களுக்கு புதிய எண்கள் வழங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே நிர்வாகத்தில் பல்வேறு வழித்தடங்களில் 296 பயணிகள் ரயில்கள் இயங்கி வருகின்றன. 2025 ஜனவரி 1ம் தேதி முதல் இந்த ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி, வாஞ்சிமணியாச்சியிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06679-க்கு பதிலாக 56731 எனவும், திருநெல்வேலிலிருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06409-க்கு பதிலாக பதிலாக 56003, வண்டி எண் 06673-க்கு பதிலாக 56728, வண்டி எண் 06675-க்கு பதிலாக 56729, வண்டி எண் 06677-க்கு பதிலாக 56733 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.
திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிற ரயில்கள் வண்டி எண் 06674-க்கு பதிலாக 56004, வண்டி எண் 06405-க்கு பதிலாக 56727, வண்டி எண் 06676-க்கு பதிலாக 56730, வண்டி எண் 06678-க்கு பதிலாக 56734, திருச்செந்துரிலிருந்து வாஞ்சிமணியாச்சிக்கு இயக்கப்படுகிற ரயில் வண்டி எண் 06671-க்கு பதிலாக 56723, வண்டி எண் 06680-க்கு பதிலாக 56732 எனவும் மாற்றம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜனவரி 1ம் தேதி முதல் பயணிகள் ரயில்களுக்கு புதிய எண்கள் வழங்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!! appeared first on Dinakaran.