விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தின் ஓடிடி உரிமை ரூ.120 கோடிக்கு விலை போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஜன நாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையினைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.
இதில் ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் முன்னணியில் இருந்தாலும், இறுதியாக அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் ஓடிடி உரிமையை கைப்பற்றி இருக்கிறது. இதற்காக 120 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. அனைத்து மொழி உரிமையும் இதில் அடங்கும்.