‘ஜன நாயகன்’ படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.
சென்னையில் ‘ஜன நாயகன்’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய காட்சிகளை வரும் வாரத்தில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.