சென்னை: ஜன.21,22-ல் சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்று முதலமைச்சர் மாவட்டந்தோறும் களஆய்வு மேற்கொண்டு வருகிறார். கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அந்த வகையில், ஜன.21-ல் காரைக்குடி அழகப்பா பல்கலையில் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஜன.22-ல் சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
The post ஜன.21,22-ல் சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார்..!! appeared first on Dinakaran.