டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் ஓபன் சூப்பர் 750 பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் 21-11, 21-18 என்ற செட் கணக்கில் சீன வீரர் வாங் ஜெங் ஜிங்கை தோற்கடித்தார்.