டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது இந்த முடிவு குறித்து ஜப்பான் நாட்டின் என்.ஹெச்.கே செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். எல்டிபி கட்சியின் தலைவர் பொறுப்பிலும் அவர் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.