புதுடெல்லி: ஸ்ரீநகர் மற்றும் சோனாமார்க் இடையே லே வரை செல்லும் ரூ.2,700 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 12 கிமீ நீளமுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜன. 13) திறந்து வைக்கிறார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 13ம் தேதி ஜம்மு & காஷ்மீரில் உள்ள சோனாமார்க் செல்கிறார். காலை 11:45 மணியளவில், அவர் சோனாமார்க் சுரங்கப்பாதையை பார்வையிடுவார். அதைத் தொடர்ந்து அதன் திறப்பு விழா நடைபெறும். இந்நிகழ்வில் அவர் உரையாற்றவுள்ளார்.