ஸ்ரீநகர்: "விலைமதில்லாத உயிர்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான நோக்கம். இரண்டாவதாக சாலைகளின் இணைப்பை மீட்டெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராம்பன் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளையும், மீட்பு பணிகளையும் இன்றும் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் சென்ற போது மக்கள் அவரின் வாகனத்தை மறித்து தங்களின் துயரங்களை தெரிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, "இது மூன்றாவது நாள். இந்த மூன்று நாட்களாக மூத்த அமைச்சர்கள் தினமும் இங்கே வந்துள்ளனர். நேற்று நான் கால்நடையாக சென்று நிலைமையை ஆய்வு செய்தேன். முடிந்த வரையில் வேகமாக மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.