சென்னை: ஜம்மு- காஷ்மீரில் நிலைமை சரியானதும் அங்கு பயிலும் தமிழக மாணவர்கள், 52 பேரை அழைத்து வரப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஜம்மு-காஷ்மீர், பஹல்காம், பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றிருந்த பொது மக்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது.