புதுடெல்லி: பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பான வழக்கில் ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே, பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சர்வதேச எல்லை (ஐபி) மற்றும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத் துறைக்கு கடந்த ஆண்டு தகவல் கிடைத்தது.