மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மேலூர் பகுதி கிராம மக்கள், விவசாயிகள் மதுரைக்கு பேரணியாகப் புறப்பட்டு வந்து, தல்லாகுளம் தபால் அலுவலகம் முன்பு பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஜல்லிக்கட்டு போராட்டம்போல் மதுரை நகரம் ஸ்தம்பித்தது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் அடங்கிய பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததன் பேரில் தனியார் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. இதற்கு மேலூர் பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி கிராம மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.