புதுடெல்லி: ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 8 நக்சலைட்டுகள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர். நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான அரசின் நடவடிக்கை தொடரும் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். மேலும், நக்ஸல்களுக்கு எதிரான இந்த தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் லுகு பஹார் பகுதியில் இடதுசாரி தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். காலை 5.30 மணி முதல் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில், சிபிஐ (மாவோயிஸ்ட்) மத்திய குழு உறுப்பினர் விவேக் உட்பட எட்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில், விவேக் தலைக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.