ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன். இதையடுத்து ராஞ்சியில் 28-ம் தேதி நடைபெறும் விழாவில் மீண்டும் முதல்வர் பதவியேற்கிறார்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் மற்றும் சில கட்சிகள் இண்டியா கூட்டணியாக போட்டியிட்டன. பாஜக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் ஜேஎம்எம் 34, காங்கிரஸ் 16 தொகுதிகள் உட்பட மொத்தம் 56 இடங்களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.