திபிலிசி: ஜார்ஜியாவில் உள்ள ஒரு உணவகத்தில் 11 இந்தியர்கள் மர்ம முறையில் பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜியா நாட்டில் மலை வாசஸ்தலமான குடாரி பகுதியில் ஒரு உணவகம் உள்ளது. இங்கு 11 இந்தியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு இரண்டாவது மாடியில் படுக்கை அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த அறையில் 11 இந்தியர்கள் உட்பட 12 பேர் மர்ம முறையில் இறந்து கிடந்தனர். இதை அங்குள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியது. இந்த மர்ம மரணம் குறித்து ஜார்ஜியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘முதற்கட்ட ஆய்வில் காயங்கள் அல்லது வன்முறைக்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால் அனைவரும் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
ஜார்ஜியாவின் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 116ன் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது கவனக்குறைவால் ஏற்பட்ட பலியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதற்கட்ட விசாரணையின்படி, வெள்ளிக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ெஜனரேட்டர் இயக்கப்பட்டது. இதில் இருந்து புகை வெளியாகி பலியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய தடயவியல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அங்குள்ள இந்திய தூதரகம் பலியான 11 பேரின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
The post ஜார்ஜியாவில் பயங்கரம்; 11 இந்தியர்கள் மர்ம சாவு: விஷம் கொடுத்து படுகொலையா? appeared first on Dinakaran.