வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜார்ஜ் சோரஸுக்கு உயரிய விருது வழங்கி இருப்பது கேலிக்கூத்து என தொழிலதிபர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் அரசியல், சமூக சேவை, விளையாட்டு மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை புரிந்த 19 பேருக்கு சுதந்திரத்துக்கான அதிபர் பதக்கங்களை அதிபர் ஜோ பைடன் கடந்த சனிக்கிழமை வழங்கினார். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸி, நடிகர்கள் மைக்கேல் ஜே பாக்ஸ் மற்றும் டென்ஜெல் வாஷிங்டன் உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.