ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 106-வது நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதரமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று மரியாதை செலுத்தினர்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் 106-வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விடுத்துள்ள செய்தியில், “ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் தங்கள் உயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்த சம்பவம் நம்முடைய சுதந்திரப் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்த்தது. இந்திய மக்கள் அவர்களுக்கு எப்போதும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்” என கூறியுள்ளார்.