புதுடெல்லி: ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. இதன்படி கார், மொபைல்போன், கணினி உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்தார். இப்போது ஜிஎஸ்டி கட்டமைப்பில் 5%, 12%, 18%, 28% என 4 வரி அடுக்குகள் உள்ளன. பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி இனிமேல் 5%, 18% என்ற இரு வரி அடுக்குகள் மட்டுமே இருக்கும். சில ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.