புதுடெல்லி: பிரதமர் மோடி மற்றும் அவரைப் போற்றுபவர்களால் ஊதிப் பெருக்கப்பட்ட ஆரவாரத்தை விட யதார்த்தம் வெகுவாக விலகியிருக்கிறது என்பதை இரண்டாவது காலாண்டின் ஜிடிபி காட்டுகிறது என்று மோடி அரசை காங்கிரஸ் சாடியுள்ளது. இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டான ஜூலை – செப்டம்பர் மாதத்துக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.4 சதவீதமாக குறைந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளரான ஜெய்ராம் ரமேஷ், ‘முந்தைய பொருளாதார அவநம்பிக்கைகளுக்கு பிந்தைய மறுகணக்கீட்டுக்கு பின்பும், மோடி அரசின் சாதனை மன்மோகன் சிங் பிரதமராய் இருந்த காலத்தை விட மோசமாக உள்ளது’ என்று சாடியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய்ராம் வெளியிட்டுள்ள பதிவில், " 2024 ஜூலை – செப்டம்பர் அடங்கிய காலாண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது அவநம்பிக்கையான மதிப்பீட்டுகளைக் காட்டிலும் மிகவும் குறைவு. இது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரைப் போற்றுபவர்கள் ஊதிப் பெரிதாக்கிய ஆராவரங்களைவிட யதார்த்தம் வெகு விலகி இருக்கிறது என்பதையேக் காட்டுகிறது.