சென்னை: குஜராத் மாநிலம் சூரத்தில் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சப்-ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த அரியானா ஓபராய், பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேவளையில் ஜூனியருக்கான பேலன்ஸ் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஓசியானா தாமஸ் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். இவர்களின் செயல் திறனால் இந்த தொடரில் தமிழக அணி பதக்க பட்டியலில் 8-வது இடத்துக்கு முன்னேறியது.