ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி புலவாயோ நகரில் இன்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 12.4 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக தொடக்க வீரர்களான பிரையன் பென்னட் 21, தடிவனஷே மாருமன் 16 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. பாகிஸ்தான் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளரான சூபியான் முகீம் 2.4 ஓவர்களை வீசி 3 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.