ஹராரே: ஜிம்பாப்வே உடனான முதல் ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் 7 ரன்களில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கடைசி ஓவர் வரை இரண்டு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி வெள்ளிக்கிழமை அன்று ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.