ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வந்த படம் ‘பிளாக்மெயில்’. பல்வேறு காரணங்களால் இப்படம் திட்டமிட்டப்படி நடைபெறாமல் இருந்தது. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மே மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.