சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி மனமுவந்து பிரிவதாக கூறி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் காதலித்து வந்தனர். 10 ஆண்டுகள் காதலர்களாக இருந்தவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு விவாகரத்தை அறிவித்தார்கள்.இந்த நிலையில் இசையப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் சார்பில் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி மனு தாக்கல் செய்தார்.