பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
‘சலார்’ படத்துக்குப் பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார் பிரசாந்த் நீல். இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க பணிகளைத் தொடங்கினார்கள். நீண்ட நாட்களாகவே இதன் நடிகர்கள் ஒப்பந்தம் மற்றும் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.