ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘வார் 2’ படத்தினை முடித்துவிட்டு, மீண்டும் தெலுங்கு படமொன்றில் நடிக்கவுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். பிரசாந்த் நீல் இயக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.