மண்டபம்: தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் ஜுன் 14ம் தேதி நிறைவடைவதையொட்டி மண்டபம் பகுதி மீனவர்கள் படகு மற்றும் வலைகளை பழுது பார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் கடற்கரை பரபரப்பாக காணப்படுகிறது. பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்தை பெருக்கவும் ஆண்டுதோறும் ஒன்றிய, மாநில அரசுகள் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்துவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான மின்பிடி தடைகாலம் கடந்த ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி இரவு வரை 61 நாள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு கடற்கரை, கோவில்வாடி கடற்கரை மற்றும் தென்கடலோர பகுதி கடற்கரையில் மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் ஏற்றி பழுநீக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இன்ஜின், படகில் ஓட்டை, உடைசல் பலைகளை அகற்றி புதுப்பிப்பது, கடல்நீரால் அரிப்பு ஏற்படாமல் தடுக்க பைபர் மற்றும் வர்ணம் பூசுவது, வலைகளை சரிசெய்வது போன்ற போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மண்டபம் கடற்கரை பரபரப்பாக காணப்படுகிறது. மீன்பிடி தடைகலாம் ஜூன் 14ம் தேதி இரவு முடிவடைவதையொட்டி 15ம் தேதி முதல் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
The post ஜூன் 14ம் தேதி தடை காலம் நிறைவு; மண்டபத்தில் விசைப்படகுகள் பழுது பார்க்கும் பணி தீவிரம்: 15ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்ல ஆயத்தம் appeared first on Dinakaran.