சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா சினிமாவில் அறிமுகமாகி 50 வருடங்கள் நிறைவடைந்ததையடுத்து, அவரது பிறந்தநாளான ஜுன் 2ம் தேதி அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1976-ம் ஆண்டு அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமான இளையராஜா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இளையராஜா, லண்டனில் கடந்த மார்ச் 8ல் வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றினார்.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்தன. இதையடுத்து இளையராஜாவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாளான ஜுன் 2ம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
The post ஜூன் 2ல் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! appeared first on Dinakaran.