ஜெய்ஷ்-இ-முகம்மது (ஜேஇஎம்) தீவிரவாத அமைப்புடன் பாகிஸ்தானின் ஆபத்தான உறவை பிரான்ஸ் நாட்டின் ஒரு பருவ இதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
பிாரன்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருந்து 'லே ஸ்பெக்டகிள் டு மாண்டே' என்ற பிரெஞ்சு பருவ இதழ் வெளியாகிறது. இதில் பாகிஸ்தானில் ஜேஇஎம்-மின் செயல்பாடுகள் குறித்த புலனாய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. தீவிரவாதத்தை எதிர்த்து போரிட வேண்டிய கடமை பாகிஸ்தானுக்கு இருந்தபோதிலும் அந்நாடு தீவிரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளித்து வருவதை அந்தக் கட்டுரை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. பாகிஸ்தானில் குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தின் பகவல்பூர் பகுதியில் ஜேஇஎம் எழுச்சி பெற்று விளங்குவதை அந்தக் கட்டுரை விளக்குகிறது.