நடப்பு ஐபிஎல் சீசனின் 17-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மொகாலியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ஜெய்ஸ்வால் ஐந்து சிக்ஸர், 3 பவுண்டரி என அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 67 ரன்கள் குவித்தார். மறுமுனையில் ஆடிய சஞ்சு சாம்சன் 38 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து இறங்கிய ரியான் பராக் 43 ரன்கள் எடுத்தார். நிதிஷ் ரானா 12 ரன்கள், ஹெட்மெயர் 20 ரன்கள், துருவ ஜுரேல் 13 என 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்திருந்தது.