பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த சமூக வலைதள பயனர் ஷரத் அண்மையில் யாசகர் ஒருவரை பற்றிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.
பெங்களூரு ஜெயநகர் சாலையோரத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில் பேசிய நடுத்தர வயதுடைய ஆண், ''நான் ஜெர்மனியில் உள்ள ஃபிராங்க்ஃபர்ட் நகரில் 2013-ம் ஆண்டு பொறியாளராக பணியாற்றினேன். அப்போது அங்கு எம்.எஸ். முடித்தேன். பின்னர் க்ளோபல் வில்லேஜில் மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருந்தேன். பின்னர் பெங்களூரு திரும்பி ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தேன்.