இளம்பிள்ளை: சேலம் மாவட்டம் காகாபாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஜேஇஇ முதன்மை தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வு காலை 8.30 மணியளவில் துவங்கியது. மையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக வந்த 50 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தேர்வு எழுத முடியாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், எங்கள் குழந்தைகள் தேர்வு எழுத பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்தோம். வரும் வழியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இருப்பினும் அவசர அவசரமாக விரைந்து வந்தும் அவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. சரியான நேரத்தில் கல்லூரி கேட்டின் உள்ளே நுழைந்தும், அங்கிருந்து தேர்வு மையம் செல்ல 5 நிமிடம் தாமதம் ஆகியதால் தேர்வு மைய பார்வையாளர் மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காதது வேதனை அளிக்கிறது. வரும் காலக்கட்டத்தில் அந்தந்த மாவட்டத்திலேயே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.
The post ஜேஇஇ முதன்மை தேர்வு: 5 நிமிடம் தாமதமாக வந்த 50 பேருக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.