மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பால் அப்பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கும்மியடித்தும் கொண்டாடினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கத்தை குத்தகைக்கு விடும் ஏல அறிவிப்பு வெளியானது. இந்த ஏலமானது நவ.7-ம் தேதி வேதாந்தாவின் துணைக் குழுமமான ஹிந்துஸ்தான் ஜிங் லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டது. இதற்கு மேலூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து போராட்டத்தில் குதித்தனர்.