சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மனு அளித்தார்.
ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கஞ்சா, போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளேன்.