யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி உட்பட பலர் நடிக்கும் படம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்’. இதை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே.நாராயணா, யாஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.
யாஷின் 39-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் பற்றி கீது மோகன்தாஸ் கூறும்போது, “இது வித்தியாசமான கதையை கொண்ட படம். யாஷ், தனித்துவமான மனிதர். அவரது புத்திசாலித்தனத்தை கவனித்துள்ளேன். சினிமா மீதான அவர் ஆர்வம் உத்வேகம் அளிக்கும்.