தமிழகத்தில் நடந்துள்ள டாஸ்மாக் ஊழலுக்கு மன்னிப்பே கிடையாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து தமாகா சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விடியல் சேகர், பொதுச் செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற தொண்டர்கள் சிலர், தங்கள் கழுத்தில் மதுபாட்டில்களை தொங்கவிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.