திருநெல்வேலி: மது போதைக்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவத்துவதற்காக, ‘போதையின் பாதையில் செல்லாதீர்கள் – பேரன்புமிகு அப்பா’ என்ற வாசகங்களுடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் அச்சடிக்கப்பட்ட ஸ்டிக்கரை தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் முன்பு ஒட்டும் போராட்டத்தை பாஜக அறிவித்தது.
அதன்படி, தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளின் முன்பு பாஜக மகளிரணியினர் ஒட்டிய ஸ்டிக்கரை அப்புறப்படுத்திய புளியங்குடி போலீஸார், இது தொடர்பாக 13 பேரை கைது செய்தனர்.