சென்னை: கால்நடை உதவி மருத்துவர், உதவி இயக்குநர் (நகர் மற்றும் ஊரமைப்பு), உதவி இயக்குநர் (புள்ளியியல்) உள்ளிட்ட 32 பதவிகளுக்கான 330 காலிப்பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தொழில்நுட்பபணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வுபதவிகள்)க்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி இன்று (7.5.2025) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 13.5.2025 முதல் 11.6.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம் கணிணி வழித் தேர்வு 20.7.2025 முதல் 23.7.2025 வரை நடைபெறும்.
தொடர்ச்சியாக 10-வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர்விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) (இரண்டு படிநிலைகளை உடையது (i) எழுத்துத் தேர்வு மற்றும் (ii) நேர்முகத் தேர்வு எழுத்துத் தேர்வானது தமிழ் தகுதித் தேர்வு பொதுஅறிவு மற்றும் பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு தரத்தில் பாடத்தாள் ஆகிவற்றை கொண்டது.
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தேர்வர்களின் தரவரிசையை தீர்மானிக்கும் தேர்வர்களின் நலன் கருதி. முதன்முறையாக பாடத்திட்டத்தில் அலகு வாரியாக கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு தேதி அறிவிப்பு appeared first on Dinakaran.