சென்னை: திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்ஐடி-டி) கட்டுமானப் பொறியியல் துறை, டிசம்பர் 12 முதல் 14-ம் தேதி வரை, 14வது கட்டமைப்பு பொறியியல் மாநாட்டுக்கு (Structural Engineering Convention-2024) ஏற்பாடு செய்துள்ளது.
கட்டமைப்பு பொறியியல் மாநாடு என்பது அதிநவீன ஆராய்ச்சி, புதுமையான பொருட்கள், நிலையான நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் கட்டமைப்பு பொறியியலை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மையான சர்வதேச மாநாடு ஆகும். மேலும் நெகிழ்தன்மையுடன் கூடிய, நிலையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கியமான சவால்களை எதிர்கொள்ள கல்வியாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைப்பதற்கான உலகளாவிய தளமாக இது செயல்படுகிறது.