சென்னை: அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தி.நகர் இந்திய கம்யூனிஸ்ட் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மாநில செயலாளர் முத்தரசன் அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற சொற்களை நீக்கிவிட வேண்டும் என்பதற்காக ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜவும், சங் பரிவார் அமைப்புகளும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். மதச்சார்பின்மை என குறிப்பிடுகிற போது அம்பேத்கருடைய நினைவு நாளை போற்றுகிற இதே நேரத்தில் தான் பாபர் மசூதியும் இடிக்கப்பட்டது.
இடிக்கப்பட்டது பாபர் மசூதி இல்லை. இந்தியாவினுடைய மதச்சார்பின்மை என்ற கொள்கை இடிக்கப்பட்டிருக்கிறது. அம்பேத்கர் நினைவுகளை போற்றுகிற நேரத்தில் அரசியலமைப்பு சட்டத்தையும் அது வழங்கியுள்ளகோட்பாடுகளையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.
The post டிச.6ல் இடிக்கப்பட்டது பாபர் மசூதி இல்லை; இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கை: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.