சென்னை: சந்தானம் நடித்துள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல், திருப்பதி வெங்கடேச பெருமாளை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், குறிப்பிட்ட பாடலில், ஆட்சேபம் தெரிவித்த வரிகள் நீக்கப்படுவதாகவும், பாடல் டியூன் மியூட் செய்யப்படும் எனவும் உறுதியளித்திருந்தார். இதையடுத்து பாடல் வரிகள் நீக்கப்பட்டுள்ளதையும், டியூன் மியூட் செய்யப்பட்டதையும் சரிபார்த்து தெரிவிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்திருந்தனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில், பாடல் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதால், வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
The post டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை வெளியிட தடையில்லை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.