மில்வாக்கி: அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பகுதியை சேர்ந்தவர் நிகிதா காஸப்(17). கடந்த பிப்ரவரியில் தனது தாய் மற்றும் வளர்ப்பு தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்றார். 2 சடலங்களுடன் பல நாட்கள் வீட்டில் தங்கியிருந்த நிகிதா காஸப் பணம், பாஸ்போர்ட் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். தீவிர தேடுதலுக்கு பின்னர் கடந்த மாதம் கான்சாஸ் பகுதியில் நிகிதா காஸப்பை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
நிகிதா காஸப் அதிபர் டிரம்பை கொல்ல சதி செய்தார் என அமெரிக்க பெடரல் போலீசார் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பெடரல் போலீசார் கூறுகையில், பெற்றோரை கொன்று அதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு டிரோன் மற்றும் ஆயுதங்களை வாங்க நிகிதா காஸப் முயற்சி செய்துள்ளார். டெலிகிராம் மற்றும் டிக்டாக்கில் போன்ற ஊடக தளங்களில் அமெரிக்க அதிபருக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதிபர் டிரம்பை கொன்று அரசை கவிழ்ப்பதற்காக வேறு சில கட்சிகளுடன் அவர் தொடர்பில் இருந்துள்ளார் என குற்றம் சாட்டினர்.
The post டிரம்பை கொல்ல மாணவன் சதி: பெற்றோரை கொன்ற வழக்கில் சிக்கியவர் மீது போலீஸ் புதிய குற்றச்சாட்டு appeared first on Dinakaran.