வாஷிங்டன்: அமெரிக்க செயற்கை நுண்ணறிவு துறைக்கான கொள்கை ஆலோசகராக சென்னையை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க அதிபராக உள்ள டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி, தொழிலதிபர்கள் எலான் மஸ்க் உள்ளிட்ட பலருக்கு தங்களின் அரசின் முக்கிய பொறுப்புகளை வழங்கி உள்ளார். அதேபோல, விவேக் ராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்நிலையில் இந்திய – அமெரிக்க தொழிலதிபரும் எழுத்தாளருமான சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து அமெரிக்காவுக்கான செயற்கை நுண்ணறிவு கொள்கையை வடிவமைப்பார் என டிரம்ப் அறிவித்துள்ளார். மைக்ரோசாப்ட், டுவிட்டர், யாகூ, பேஸ்புக் நிறுவனங்களிலும் ஸ்ரீராம் கிருஷ்ணன் பணியாற்றி உள்ளார். தமிழரான இவர் சென்னை காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரான டேவிட் சேக்சுடன் பணியாற்றிய ஸ்ரீராம் கிருஷ்ணன், ஏ.ஐ.,க்கான அமெரிக்க தலைமை பொறுப்பை கவனிக்க இருக்கிறார். தனது நியமனத்திற்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன், நாட்டிற்கு சேவை செய்யவும், AIயில் தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையை உறுதிப்படுத்தவும் பெருமைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் தளத்தை மஸ்க் வாங்கியவுடன் அதன் CEO-வாக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post டிரம்ப் அரசில் மற்றொரு இந்தியர்.. அமெரிக்காவின் ஏ.ஐ. பிரிவின் ஆலோசகராக சென்னை தமிழர் நியமனம்..!! appeared first on Dinakaran.