டிராகன் விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா வெளியே வந்தார். முதல் வீரராக பெக்கி விட்சன், விண்கலத்தில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டார். 2வதாக விண்கலத்தில் இருந்து இந்தியாவின் சுபான்ஷு சுக்லா வெளியே வந்தார். பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும். மருத்துவ பரிசோதனைக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்புவரை 4 வீரர்களும் 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பர். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுவிட்டு திரும்பிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சுபான்ஷு.
The post டிராகன் விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா வெளியே வந்தார் appeared first on Dinakaran.