விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவி, தங்களின் கிராமத்துக்கு போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதை நிறைவேற்றியுள்ளார்.
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார் தர்ஷினி. இவர் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி பாட்டு போட்டியில் கலந்து கொண்டு பாடலை பாடி அனைவரையும் கவர்ந்தார். அப்போது பள்ளிக்கு சென்று படிப்பதற்கு அம்மணம்பாக்கம் – அனந்தமங்கலம் வரையிலான போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தித் தருமாறு அந்நிகழ்ச்சியின் வாயிலாக தமிழக அரசிடம் கோரிக்கையாக கேட்டுக்கொண்டார்.