சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, 38 இடங்கள் முன்னேறி 2-ம் இடம் பிடித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக் கெதிரான சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில், அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
இந்தத் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் டி20 கிரிக்கெட் வீரர்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில், அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி 2-ம் இடத்தை பிடித்துள்ளார். அவர் 829 புள்ளிகள் எடுத்துள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 855 புள்ளிகளுடன் இருக்கிறார்.