சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டியை ஒட்டி மெட்ரோ ரயில் சேவை நீடிக்கப்பட்டுள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் இரவு 12 மணிக்கு புறப்பட உள்ளது. டி20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி எந்த மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ வரை இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post டி20 கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! appeared first on Dinakaran.