துபாய்: சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சார்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா 829 புள்ளிகளுடன் 2-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 856 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதிரடி வீரர்களான திலக் வர்மா (804), சூர்யகுமார் யாதவ் (739)ஆகியோர் முறையே 4 மற்றும் 5-வது இடங்களில் உள்ளனர். இங்கிலாந்தின் பில் சால்ட் 815 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறார்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஹர்திக் பாண்டியா 252 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நேபாளத்தின் திபேந்திரா சிங் ஐரீ 233 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டாயினிஸ் 210 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.