இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறையால் அன்றாட மின்வெட்டு நேரம் 10 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை. இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலையோ கடுமையாக உயர்ந்துள்ளன. எரிபொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு என, அடுத்தத் தடுத்த பிரச்சனைகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது இலங்கை.
மார்ச் மாதத்தின் தொடக்கம் முதல் ஏழு மணி நேர மின்வெட்டு இருந்த நிலையில், நீர் மின்சக்தி உற்பத்தியும் குறைந்துள்ளதால், மின்பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால் இனி 10 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வருவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 37,500 மெட்ரிக் டன் டீசலைத் தரையிறக்க முடியாத நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும், நாளையும் டீசலை பெற முடியாத நிலை உள்ளதாக, அந்நாட்டின் பெட்ரோலிய கூட்டமைப்பின் தலைவர் அறிவித்துள்ளார்.
இதனால் டீசலுக்காக நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகளின் காத்திருக்கு தொடர்கிறது. இந்த நிலையில், நுவரெலியா அட்டன் நகரில் முக்கிய சாலைகளை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகளும், ஆட்டோ ஓட்டுநர்களும் போராட்டத்தில் இணைந்ததால், அட்டன் நகரத்தின் பெரும் பகுதி முடங்கியது.